Thursday 2nd of May 2024 11:38:49 PM GMT

LANGUAGE - TAMIL
.
அரசமரம், தீர்த்தக்கேணி காணி குறித்து இராணுவத்தினரால் விசாரணை: கந்தரோடையில் குழப்பம்!

அரசமரம், தீர்த்தக்கேணி காணி குறித்து இராணுவத்தினரால் விசாரணை: கந்தரோடையில் குழப்பம்!


சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுதினர் எனக்கூறியோர் விசாரித்ததால் அந்தப் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர்.

அந்த ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர்.

கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைதீவு குருந்தூர்மலை பகுதி ஆதி ஐயனார் கோவிலடி, கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் கோவிலடி மற்றும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்று பகுதி என்பன தொடர்ச்சியாக தொல்லியல் துறையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் சூழலில் தற்போது யாழ். கந்தரோடை பகுதியில் உள்ள வற்றாக்கை அம்மன் ஆலய சூழலிலும் இராணுவத்தினர் எனக் கூறியவர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் இடம்பபெற்றுள்ளமை தொல்லியல் துறையினூடாக குறித்த பகுதியும் ஆக்கிரமிக்கப்படலாம் என்ற அச்சமே அங்கு குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதற்கு காரணமாகும்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE